സെന്റ് പോൾസ്.എച്ച്.എസ്. കൊഴിഞ്ഞാംപാറ/தமிழ் விக்கி/നാഷണൽ കേഡറ്റ് കോപ്സ്

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
2021-22 ലെ സ്കൂൾവിക്കി പുരസ്കാരം നേടുന്നതിനായി മൽസരിച്ച വിദ്യാലയം.
NCC

தேசிய மாணவர் படையின் வரலாறு - தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி கொழிஞ்சாம்பாறை

1951 இல் தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி கொழிஞ்சாம்பாறையில் தேசிய மாணவர் படை எனது துவங்கப்பட்டது. துவங்கிய போது அதற்கான பெயர் ACC

(Axillary cadet Corps) என்று அழைக்கப்பட்டது. 1954 இல் ACC என்ற அமைப்பு NCC தேசிய மாணவர் படை ஆக மாற்றப்பட்டது. அதன் தலைமையகம் கோயமுத்தூர் ஆக இருந்தது. 1956 பாலக்காடு 27/(K)BN. NCC தேசிய மாணவர் படை அமைப்பு பாலக்காட்டில் அமைக்கப்பட்ட போது இதன் தலைமையகம் பாலக்காட்டுக்கு மாற்றப்பட்டது.

இதைப் பள்ளியில் துவங்கிய போது தாளாளர் , தலைமை ஆசிரியர் , தேசிய மாணவர் படை பொறுப்பாளர் ஆகிய மூன்று பொறுப்புகளும் மதிப்பிற்குரிய அருட்தந்தை மானுவேல் நியமிக்கப்பட்டார் . பின்னர் தலைமை ஆசிரியரும் , மேலாளரும் ஒரே நபராக இருக்கலாம் என மாற்றம் ஏற்பட்டபோது 1957 இல் திரு தங்கப்பன் ஆசிரியர் ஆசிரியராகவும் , தேசிய மாணவர் படை தலைவராகவும் பொறுப்பில் இருந்தார் . நீண்டகாலம் தேசிய மாணவர் படையில் தலைவராக இருந்தார் அதன் பின்னர் திரு சோமசுந்தரம் ஆசிரியர் தலைவராக பொறுப்பேற்றார் . 1997 வரை பதவியில் இருந்தார் . 1999 ஜூன் மாதம் சுபாஷ் ஆசிரியர் என்சிசி தலைவராகவும் ஆசிரியராகவும் பொறுப்பேற்று 2020 - 21 மே மாதம் 30ஆம் தேதி வரை அவருடைய சேவை தொடர்ந்தது. 2021 ற்கு பிறகு பாசில்லா ஆசிரியை ஜூன் 2020 - 21 இல் ஆசிரியராகவும் , தேசிய மாணவர் படை தலைவராகவும் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார் .

கேரளா லட்சத்தீவு குழுவின் தலைவராக கமாண்டராக எங்கள் பள்ளியில் படித்த அபுதாஹீர் என்ற மாணவன் தேர்ந்தெடுக்கப்பட்டது எங்கள் பள்ளிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும். 2013-இல் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் அன்றைய குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா பட்டேல் ரிபப்ளிக் டே பரேடு அபுதாஹீர்க்கு அணிவித்தார். இது மேலும் எங்கள் பள்ளிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும்.

கப்பல் படை , ராணுவம் , விமானப்படை போன்ற துறைகளில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் ஏராளம். தேசிய மாணவர் படை சான்றிதழ் மூலம் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பணிபுரியும் முன்னாள் மாணவர்களும் உள்ளனர்.